கண்கவர் வடிவமைப்பில் ZTE அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி | Tamil Serial Today Org

கண்கவர் வடிவமைப்பில் ZTE அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

கண்கவர் வடிவமைப்பில் ZTE அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிZTE நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தை குறுகிய காலத்தில் பிடித்துவிட்டது.

இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் ஏனைய முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் சிறந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது ZTE Nubia Z11 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் தொடுதிரையானது 5.5 அங்குல அளவு உடையதாகவும், 1920 x 1080 Pixel Resolution உடையதாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் இரண்டு வகை பதிப்புக்களாக வெளிவரவுள்ள இக்கைப்பேசியில் Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 6GB RAM என்பனவற்றுடன் 64GB, 128GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ள இதன் விலையானது 375 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Loading...
Rates : 0
VTST BN