ஓட்ஸ் ரவா தோசை

Loading...

ஓட்ஸ் ரவா தோசை
தேவையான பொருட்கள்:

பொடி செய்த ஓட்ஸ் – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
ரவை – 50 கிராம்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்


செய்முறை:

ஒரு பௌலில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் சீரகம், மிளகுத் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கல்லில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் ரவா தோசை ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply