ஒரு கப் டீயில் இருக்கும் மலைக்க வைக்கும் நன்மைகள்

Loading...

ஒரு கப் டீயில் இருக்கும் மலைக்க வைக்கும் நன்மைகள்தினமும் காலையில் எழுந்ததும் நாம் குடிக்க நினைப்பது டீ தான். அந்த டீ உடலுக்கு நல்லதா, கெட்டதா என்று எதுவும் தெரியாது. ஆனால், டீ குடிக்காமல் என்னால் இருக்க முடியாதுப்பா, என்று கூறும் பலர் உள்ளனர்.

நீங்களும் அப்படிப்பட்டவராயின், டீயின் மகத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சரி, இப்போது டீயில் இருக்கும் மலைக்க வைக்கும் நன்மைகளைப் பார்ப்போம் வாருங்கள்…

* டீயில் வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி போன்ற சத்துக்களும், மேங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் முதலிய தாதுப் பொருட்களும் இருக்கின்றன.

* மேலும், டீயில் பாலிஃபீனால்கள், பிளேவோனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இவை, இதய நோய், புற்றுநோய், கண்புரை நோய், ஆஸ்டியோபோரோஸிஸ் எனும் எலும்புத் தேய்மான நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவற்றை பெருமளவு குறைக்கின்றன.

* டீயில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களின் அளவைக் கட்டுப்படுத்தி, நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கின்றன.

* பெண்களுக்கு மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பின் ஏற்படும் எலும்புத் தேய்மானத்தை குணப்படுத்தும் தன்மை டீக்கு இருக்கிறது.

* அதுமட்டுமல்ல, மாரடைப்பை பெருமளவில் டீ குறைக்கிறது என்று ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

* டீயானது எல்லா வகையான புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியையும், அவை உடலில் பரவும் வேகத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும், புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறனும் டீக்கு உள்ளது.

* டீ குடிப்பதனால் பற்களின் அளவை கூட மேம்படுத்தலாமாம். ஆம், டீயில் காணப்படும் ‘ப்ளுரைடு’ பற்களின் வலிமைக்கு மிகவும் நல்லது.

என்னங்க, ஆச்சரியமா இருக்கா…? நாம் தினமும் குடிக்கும் டீயில் தான் இத்தனை நன்மைகள் நமக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. அதான் இப்பொழுது தெரிந்தது அல்லவா, இனி குடும்பத்தோடு டீ டைமில் சந்தோஷமாக டீ குடிக்கலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply