உருளைக்கிழங்கு ரெசிபி

Loading...

உருளைக்கிழங்கு ரெசிபி
தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 250 கிராம் (வேக வைத்து, தோலுரித்தது)
சில்லி ஃப்ளேக்ஸ் – 2 டீஸ்பூன்
பூண்டு – 10
பல்வறுத்த சீரகம் – 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) தண்ணீர் – 1/4 கப்

செய்முறை:

முதலில் பூண்டு, வறுத்த சீரகம், சில்லி ப்ளேக்ஸ், மிளகு தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, 4-5 நிமிடம் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மாங்காய் தூள், கருப்பு உப்பு சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் பிரட்டி விட வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கி விட வேண்டும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply