உருளைக்கிழங்கு மசாலா போண்டா

Loading...

உருளைக்கிழங்கு மசாலா போண்டா
தேவையான பொருட்கள் :

கடலை மாவு – அரை கப், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.பெருஞ்சீரகம் – சிறிதளவு


மசாலா செய்வதற்கு :

உருளைக்கிழங்கு – 150 கிராம், கேரட் – 1, உப்பு – தேவைக்கேற்ப, பெரிய – வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவுஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

* உருளைக்கிழங்குடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து ஒன்றும் பாதியாக மசித்து வைக்கவும். * கேரட்டை துருவிக்கொள்ளவும்.* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் கேரட் துருவல் சேர்த்துக் கிளறி, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும். * கடைசியாக கொத்தமல்லி சேர்த்து, ஆறியதும் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.* கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாகக் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடனாதும் செய்து வைத்த உருண்டைகளை, இந்தக் மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.* சுவையான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply