உருளைக்கிழங்கு ஃபிரை

Loading...

உருளைக்கிழங்கு ஃபிரை
தேவையானவை :

உருளைக்கிழங்கு – அரை கிலோ,மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,மல்லித்தூள்(தனியா) – அரை டீஸ்பூன்,கரம்மசாலா – அரை டீஸ்பூன்,கடுகு – அரை டீஸ்பூன்,எண்ணெய் – 2 டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிதளவு,சீரகம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்..அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன்எண்ணெய் ஊற்றி உருளைகிழங்கு சேர்த்துக் கிளறி சிறிது உப்பு சேர்த்து எண்ணெயின் சூட்டலே சிறிது நேரம் வேகவிடவும்.
கிழங்கு வெந்ததும்,அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.இத்துடன் மல்லித்தூள்,கரம்மசாலா,மிளகாய்த்தூள் , உப்பு சேர்த்து கிளறி மசாலா வாசனை போனதும் இறக்கி பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply