உருளைக்கிழங்கின் மருத்துவ பயன்கள்

Loading...

உருளைக்கிழங்கின் மருத்துவ பயன்கள்உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் உணவுகளில் ஒன்று, மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
உருளைக்கிழங்கில் கலோரிகள்,பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்வயிற்றுப் புண் குணமாகும்
காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.


மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வு

உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.


சிறுநீரக பிரச்னைகளுக்கு

உருளைக்கிழங்கு அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி, இதில் சிறுநீரகத்தை சீராக இயக்கும் சக்தி உள்ளது.


தீப்புண்களுக்கு

உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும், மேலும் அந்த தடமும் விரைவில் மறைந்துவிடும்.


இரைப்பை கோளாறுகள் சரியாக

கீழ்வாதம், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக் கிழங்கை தோலுடன் பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால் முற்றிலும் குணமாகும்.


முகப் புத்துணர்ச்சியாக இருக்க

பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும்.


வீக்கம் சரியாக

வீக்கம் மற்றும் வலி உள்ள இடங்களில்,உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து சூடு செய்து அதனுடன் கிளிசரின் சேர்த்து தைலமாக பயன்படுத்து வந்தால் ஒரே நாளில் வீக்கமும் வலியும் குறைந்து விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply