உதட்டை மிருதுவாக்கும் லிப் பாம் வீட்டில் செய்வது எப்படி

Loading...

உதட்டை மிருதுவாக்கும் லிப் பாம்  வீட்டில் செய்வது எப்படிஇயற்கை முறையில் செய்யப்படும் லிப் பாம் முற்றிலும் ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை. ஆன்டி ஆக்ஸிடென்ட்தான் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியவை. தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் தேன் மெழுகு – 3 டீஸ்பூன் பிரவுன் நிற சாக்லேட் – 1 டீஸ்பூன்.மேலே கூறியுள்ள மூன்றினையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றை நேரடியாக சூடுப்படுத்தக் கூடாது. வேறொரு அகன்ற பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி, அதில் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். அடுப்பினை குறைந்த தீயிலேயே வைத்திருங்கள். நன்றாக இந்த கலவை கரைந்ததும், எடுத்து ஆற வைக்கவும். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது அதனை உதட்டில் பூசிக் கொள்ளுங்கள்.இந்த லிப் பாம் உங்கள் உதடுகளில் ஏற்படும், வெடிப்பு, வறட்சி, கருமை ஆகியவை காணாமல் போய், மிருதுவான அழகான உதடு கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply