உணவுப் பரிசாரகர் பணியில் பராக் ஒபாமாவின் புதல்வி சாஷா

Loading...

Sasha-Obama-720x480அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இளைய புதல்வியான சாஷா ஒபாமா தற்காலிகமாக வெள்ளைமாளிகையைத் துறந்து கடலுணவு உணவகம் ஒன்றில் கோடைவிடுமுறை வேலை வாய்ப்பைப்பெற்றுள்ளார்.

மசாசூட்ஸ் மாநிலத்திலுள்ள மார்த்தா வைன்யாட் உள்ள Nancy’s Restaurant உணவகத்தில் உணவு பரிமாறும் பரிசாரகராக 15 வயதான சாஷாஒபாமா பணிபுரிவதாகவும் அவருக்குப் பாதுகாப்பாக அமெரிக்க இரகசியபுலனாய்வு சேவையை சேர்ந்த 6 முகவர்கள் சென்றுவருவதாகவும் குறப்பிடப்பட்டுள்ளது.
இதனை போஸ்ரன் ஹெரால்ட் ஊடகமும் தனது செய்திகளில் உறுதிப்படுத்தி மேற்படி உணவகசீருடையை அணிந்தபடி சாஷா ஒபாமா உணவு பரிமாறும் ஒளிப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

பராக் ஒபாமாவின் விருப்பத்துக்குரிய கோடைவிடுமுறைஇடமாக இந்தப்பகுதி இருப்பதால் அவரது மகளான சாஷாஒபாமா தனது வேலைக்காக இந்த இடத்தைத் தெரிவு செய்திருக்கக் கூடுமெனவும் ஊகிக்கப்படுகிறது

இதேவேளை அரசதலைவர் பராக்ஒபாமாவின் புதல்விதான் இவ்வாறு தம்முடன் பணியாற்றுகின்றார் என்பதை அவருடன் பணிபுரியும் ஏனைய பணியாளர்களால் முதலில் புரிந்து கொள்ள இயலவில்லை .

இதனால், சிறுமி ஒருவருக்கு 6 பாதுகாவலர்கள் பாதுகாப்பு மற்றும் ஒத்தாசைகள் வழங்குவது குறித்து அவர்கள் ஆச்சரியமடைந்த நிலையில் பின்னர் உண்மை நிலைவரத்தை அறிந்து மகிழ்வடைந்துள்ளனர்.

தனது புதல்விகளை இயலுமானவரை சாதாரணமானவர்களாக வளர்க்க பிரியப் படுவதாக ஒபாமாவின் துணைவியும் முதற் பெண்மணியுமான மிஷேல் ஒபாமா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply