உடல் நலத்தை அதிகரிக்கும் பூசணி வகை காய்கள்

Loading...

உடல் நலத்தை அதிகரிக்கும் பூசணி வகை காய்கள்எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் உடல்நலத்தை அதிகரிக்க எனில் அதற்கு சிறந்த உணவுகள் காய்கறிகள். அதிலும் எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து சமைத்து உண்பது உடல் வலுவை காக்க உதவுகிறது. அந்த வகையில் பூசணி வகை காய்கறிகள் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இனிக் காணலாம்….


பாகற்காய்

பூசணி வகை காய்கறிகளிலேயே பாகற்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த காயை நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படுவதோடு, இரத்தம் சுத்திகரிக்கப்படும் மற்றும் இதனை அதிகம் சாப்பிட்டால் சருமம் அழகாக மின்னும்.


சுரைக்காய்

சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள், சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகிவிடும்.


புடலங்காய்

புடலங்காயில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. ஆகவே இதனை டயட்டில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது கட்டுப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.


பீர்க்கங்காய்

இந்த காய்கறியில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் தையமின் மற்றும் ரிபோஃப்ளேவினும் அடங்கியுள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், இந்த ஊட்டச்சத்துக்களை பெறலாம்.


கோவைக்காய்

பூசணி வகையான காய்கறிகளிலேயே கோவைக்காய் மிகவும் பிரபலமானது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஆகவே தான் மருத்துவர்கள், இந்த காயை நீரிழிவுள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply