உடல் எடையைக் குறைக்க உதவும் சக்தி வாய்ந்த 4 இந்திய உணவுப் பொருட்கள்

Loading...

உடல் எடையைக் குறைக்க உதவும் சக்தி வாய்ந்த 4 இந்திய உணவுப் பொருட்கள்தற்போது உடல் எடையால் கஷ்டப்படுபவர்கள் அதிகம். இத்தகையவர்கள் தங்களின் உடல் எடையைக் குறைக்க எத்தனையோ முயற்சிகளைப் பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் உடல் எடையில் எவ்வித மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறேன் பேர்வழி என்று பலர் தவறான செயல்களைப் பின்பற்றுவதோடு, உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதனை உணவில் சேர்த்து வருவதில்லை.
அப்படி இருந்தால் உடல் எடை எப்படி குறையும். எனவே உடல் எடையைக் குறைக்க அன்றாடம் உடற்பயிற்சி செய்வதுடன், அதனைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களை தெரிந்து கொண்டு அதனை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது உடல் எடையைக் குறைக்கும் இந்திய உணவுகளைப் பார்ப்போம்.


பூண்டு

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தாலே, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் 1-2 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.


கறிவேப்பிலை

கறிவேப்பிலை கருமையான முடியை மட்டும் தர பயன்படுவதில்லை. உடல் எடையைக் குறைக்கவும் தான் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் கறிவேப்பிலையை சாப்பிடுவதால், அது செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து நச்சுக்களை வெளியேற்றி, கொழுப்புக்களை கரைத்து உடலை சுத்தம் செய்கிறது. அதற்கு கறிவேப்பிலையின் 4-5 இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். மேலும் உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையையும் தூக்கி எறியாமல் சாப்பிட வேண்டும்.


மோர்

பால் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் உடல் எடையைக் குறைக்கும் போது உணவில் பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் பாலில் மட்டும் தான் கொழுப்புக்கள் உள்ளதே தவிர, மோரில் கொழுப்புக்கள் எதுவும் இருப்பதில்லை. எனவே தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்து வந்தால், அது உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும்.


பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் உள்ள காரத்திலேயே உடலில் உள்ள கொழுப்புக்களானது கரைந்துவிடும். எப்படியெனில் இதில் உள்ள காரத்தினால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, கொழுப்புக்களானது எளிதில் கரைந்துவிடுகிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் பச்சை மிளகாயை சேர்த்து வருவது நல்ல பலனைத் தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply