உடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க வயர்லெஸ் சென்சார்

Loading...

உடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க வயர்லெஸ் சென்சார்மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக பல நோய்த் தாக்கங்கள் உண்டாகின்றன.
இவற்றில் அனேகமான நோய்களை விரைவாக கண்டறிய முடிவதுடன், நோய்களை மாற்றும் மருந்து, சிகிச்சை முறைகளும் காணப்படுகின்றன.
எனினும் சில வகையான நோய் நிலைமைகள் உண்டாவதை கண்டறிவதே கடினமாக இருக்கும்.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கும். இதனால் நோய் நிலைமை அதிகரித்து மரணத்திற்கு வழிவகுக்கும்.

இதனைத் தவிர்ப்பதற்கு தற்போது அதி நவீன வயர்லெஸ் சென்சார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னிய பல்கலைக் கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த சென்சார் ஒரு மண் துணிக்கை அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்கின்றது.
இச் சென்சாரை உடலின் உட்பகுதியில் பொருத்துவதன் ஊடாக உடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க முடியும்.
அவ்வாறு ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொண்டு உடனடியாக வேண்டிய சிகிச்சைகளை மேற்கொள்வதன் ஊடாக குறித்த நோய் நிலமையிலிருந்து விரைவாக குணமடையச் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply