உடற்பருமன் தொற்றுநோயாக இருக்கலாம்

Loading...

உடற்பருமன் தொற்றுநோயாக இருக்கலாம்நம்மில் பலர் அதிகளவு உணவு உட்கொள்வதாலும், போதியளவு உடற்பயிற்சியின்மையாலும், விரும்பத்தகாத மரபணுக்களின் சேர்க்கையாலும் தான் உடற்பருமன் ஏற்படுகிறது என எண்ணுகிறோம்.

ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் மனித உணவுக் கால்வாயில் ஒட்டி வாழும் சிலவகை பற்றீரியாக்களே காரணம் என கருதுகின்றன.

அத்துடன் இப்பற்றீரியாக்கள் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தொற்றக் கூடியது எனவும், அவரில் தொற்றுநோயாக உடல் பருமன் அதிகரிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

முதன் முறையாக லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் உணவுக்கால்வாயில் வாழும் பற்றீரியாக்களால் வித்துகள் உருவாக்கப்படுவது அவதானிக்கப்பட்டது.

இவை காற்றில் சுயாதீனமாக வாழக்கூடியவை. இதனால் அருகாமையயிலுள்ளவர்களுக்கும் தொற்றும் வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

இதற்காக130 வகை பற்றீரியாக்கள் ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

இப்பற்றீரியாக்களால் கலங்களுக்கு வெளியே சுரக்கும் சுரப்புக்களே மனித உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply