உங்க மொபைல் போன் கூட வெடிக்கலாம் பத்திரமா இருந்துக்கோங்க

Loading...

உங்க மொபைல் போன் கூட வெடிக்கலாம்! பத்திரமா இருந்துக்கோங்கதற்போது ஸ்மார்ட் போன்களில் உள்ள பேட்டரிகள் வெடிக்கும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இது பொதுவாக நடக்கக் கூடிய விடயம் இல்லை. அரிதான ஒன்று தான். பேட்டரி தவறாக தயாரிக்கப்பட்டிருந்தாலோ, தரமற்றதாக இருந்தாலோ அல்லது சார்ட் சர்யூட் (Short circuit) ஆனாலோ தான் வெடிக்கும் நிகழ்வுகள் ஏற்படும்.

போலி பேட்டரி மட்டுமல்லாது தரமற்ற சார்ஜர்கள் கொண்டு போனை சார்ஜ் செய்யும் போதும் வெடிக்கிறது.

இன்றையப் போன்களில் வழங்கப்பட்டிருக்கும் லித்தியம் அயன் பேட்டரி, தெர்மல் ரன் அவே (thermal runaway) என்ற பிரச்சனையை அதிகம் சந்திக்கிறது. இது பேட்டரியை அதிக அளவில் சார்ஜ் செய்வதால் ஏற்படும்.

இந்த தெர்மல் ரன் அவே பிரச்சனையை தவிர்க்கவே அதிகளவு சார்ஜ் ஆவதை நிறுத்தும் அமைப்பு பேட்டரிகளில் பொருத்தப்படுகின்றது.

எனவே போனை முழுநேரமாக சார்ஜ் போடாமல் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுவிட்டால் எடுத்து விடுங்கள்.

அதேபோல் தரமான பேட்டரிகளையும், சார்ஜ்சர்களையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

மேலும், தற்போது பேட்டரிகள் போன்களுக்கு ஏற்றவாறு மிகவும் மெலிதானதாக வருவதால் சாட் சர்க்யூட் ஆக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

வடிவமைப்புகளில் தரத்தை பின்பற்றாவிட்டால் பிறகு பேட்டரியோடு போன் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply