இளம் வயதில் வெள்ளை முடி வருவதை எப்படி தடுப்பது

Loading...

இளம் வயதில் வெள்ளை முடி வருவதை எப்படி தடுப்பதுதலைமுடி நரை ஏற்படுவது என்பது அனைவருக்கும் வயதானால் ஏற்படும் ஒரு பொதுவான விஷயம் தான். ஆனால், அறுபதில் ஏற்பட வேண்டிய ஒன்று இருபதில் ஏற்படும் போது தான் அது மாபெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. நண்பர்களின் கேலி, பெண்கள் சட்டைக்கூட செய்யாமல் முகத்தை திருப்பிக் கொள்வது குழந்தைகள் கூட அங்கிள் ரேஞ்சில் நம்மை பார்ப்பது என்று முகத்தை திருப்பும் பக்கம் எல்லாம் நம்மை கடுப்படிக்கும் ஏதேனும் ஓர் நிகழ்வு நடந்துக் கொண்டே தான் இருக்கும். இதற்கான தீர்வை தேடி ஒடுபவரா நீங்கள்… இதோ உங்களுக்கான டிப்ஸ்….ஆய்வு

ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.ஊட்டச்சத்து

நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.காப்பர் சத்து

கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காப்பர் தான், உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது. ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து, வெள்ளை முடி ஏற்படுகிறது. மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.இயற்கை கோளாறு

சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்லமுடியவில்லை என்று இருப்பவர்கள், அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம். அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய் எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.கறிவேப்பிலை

இந்திய மக்களின் கருமையான கூந்தலுக்கான இரகசியம் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையை சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எண்ணெயில் ஊற வைத்து, கூந்தலுக்கு தடவி வரலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply