இயற்கை உணவு அளிக்கும் இலவச மருத்துவ குறிப்பு

Loading...

இயற்கை உணவு அளிக்கும் இலவச மருத்துவ குறிப்புநம் அன்றாட வாழ்வில், சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம்.


கறிவேப்பிலை:
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது நல்லது. இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றைத் தீர்க்கும்.


கொத்தமல்லி:
செரிமானத்தை அதிகரிக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இது, ஒரு டீடாக்ஸ் கீரை எனலாம்.


இஞ்சி:
பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத் தீர்க்கும்.


பூண்டு:
கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வாயுத் தொல்லைகள் உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டுவர புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.


மிளகு:
மிகச்சிறந்த டீடாக்ஸ் உணவு. விஷத்தை முறிக்கும். தேனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்துச் சாப்பிட்டால், சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


சோம்பு:
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நீக்கும். வாந்தியை நிறுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மணமூட்டியாகச் செயல்படுவதுடன், செரிமான சக்தியையும் மேம்படுத்தும்.


சீரகம்:
உள் உறுப்புகளைச் சீர்செய்வதால் சீரகம் என்று பெயர் பெற்றது. வயிற்றுப் புண் மற்றும் தலைசுற்றலைச் சரிசெய்யும். ரத்தஅழுத்தத்தைச் சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.


மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நல்லது. சிலவகைப் புற்றுநோய்களைத் தீர்க்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.


வெந்தயம்:
உடலின் வெப்பநிலையைச் சமன்செய்யும். கண் எரிச்சலைப் போக்கி, குளிர்ச்சியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியைச் சமாளிக்க, நீர் மோருடன் சிறிதளவு வெந்தயத்தைக் கலந்து குடிக்லாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply