இனி நீங்களும் தொலைக்காட்சி நெட்வொர்க் உரிமையாளர் ஆகலாம்

Loading...

இனி நீங்களும் தொலைக்காட்சி நெட்வொர்க் உரிமையாளர் ஆகலாம்‘டிஜிட்டல்’ கேமராக்கள் நம் எல்லோர் பாக்கெட்டிலும் இன்று இருப்பதால், நாம் எல்லாருமே புகைப்படக் கலைஞர்களாகி விட்டோம். இனி அடுத்து என்ன? ‘பெரிஸ்கோப்’ என்ற மென்பொருள் பலரை தொலைக்காட்சி நெட்வொர்க் உரிமையாளர்களாக மாற்ற வந்திருக்கிறது.

நீங்கள் பார்க்கும் ஊர்வலங்கள், போகும் சுற்றுலாக்கள், உணவகங்கள் அலுவலக மீட்டிங் என்று எதையும் மொபைலில், அந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போதே படமெடுத்து உங்களுக்கு வேண்டியவர்களுக்கு, ‘ஸ்ட்ரீமிங்’ தொழில்நுட்ப முறையில் ஒளிபரப்பு செய்யலாம்.

அதாவது, நேரலை ஒளிபரப்பு போல! நீங்கள் ஒளிபரப்பு செய்வதை பார்க்க விரும்பும் உங்கள் சுற்றமும் நட்பும், அதே போல பெரிஸ்கோப் செயலியை தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்துவைத்தால் போதும்.
பாரீஸ் நகர குண்டுவெடிப்பு, சிரிய அகதிகள் பிரச்னை போன்றவற்றின்போது செய்தியாளர்கள் உட்பட பலரும் பெரிஸ்கோப்பை பயன்படுத்தி காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply