இனிப்பு மாங்காய் பச்சடி

Loading...

இனிப்பு மாங்காய் பச்சடி
தேவையானப் பொருட்கள்

மாங்காய் – 2
பச்சை மிளகாய் – 4 (கீறியது)
வெல்லம் – 1/4 கப் (பொடித்தது)
தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
வேப்பம்பூ – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை

முதலில், மாங்காயைத் தோலை நீக்கி விட்டு செதில் செதிலாக சீவி லைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, கீறிய பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர், அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
நன்கு வெந்ததும், வெல்லம் மற்றும் தேங்காயை சேர்க்கவும். இறக்கும் முன்பு, வேப்பம் பூவை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். இனிப்பு, புளிப்பு கலந்த சுவையான மாங்காய் பச்சடி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply