இந்த ஒரு ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, வேகமாய் முடி வளரும்!

Loading...

இந்த ஒரு ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, வேகமாய் முடி வளரும்!ஒரு மாதத்தில் கூந்தல் குறைந்தபட்சம் 1 சென்டிமீட்டர் வளரும். இடுப்பு வரை கூந்தல் வளர, சுமார் 7 வருடங்கள் ஆகும். தோள்பட்டை வரை வளர அதிகபட்சம் மூன்று வருடங்கள் ஆகும்.

ஆனால் நிறைய பேருக்கு, முடி வளர்ச்சி என்பது எட்டா கனவாகவே உள்ளது. வேகமாய் தோள்பட்டைக்கும் கீழே வளர்ந்து அதன் பின் வளர்ச்சி நின்று போய்விடுவதுண்டு. இதற்கு கூந்தலுக்கு தேவையான ஊட்டம் இல்லாமல் இருக்கலாம் அல்லது முடி வளர்ச்சி வேர்கால்களில் தூண்டப்படாமல் இருக்கலாம்.


வேர்கால்களை தூண்டுவது எப்படி?

முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் ஆகும். அது போல், சீப்பினால் வேர்கால்களில் லேசாக அழுத்தம் கொடுத்தால், ரத்த ஓட்டம் பாயும். வேர்கால்கள் தூண்டப்படும். எனவே தினமும் காலை மாலையில் சீப்பினால் அழுந்த சீவுங்கள்.


கூந்தலுக்கு ஊட்டம் தரும் மாஸ்க் :

கூந்தலுக்கு ஊட்டம் தர ஒரு எளிய வழி உள்ளது. இதனை தொடர்ச்சியாக நீங்கள் பின்பற்றினால், வேகமாய், அடர்த்தியாய் முடி வளருவது உறுதி.


தேவையானவை :

முட்டையின் மஞ்சள் கரு-2
விளக்கெண்ணெய் – சிறிய கப் அளவு
தேன் – 3 ஸ்பூன்

விளக்கெண்ணையை லேசாக சூடு படுத்தி, தேன் மற்றும் மஞ்சள் கருவை அதில் சேர்த்து கலக்குங்கள். இதனை ஸ்கால்ப்பில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். பின் கூந்தலின் நுனி வரை இந்த கலவையை போட்டு, தலை முழுவதும் ஒரு கவரினால், மூடுங்கள்.

கூந்தலுக்கு தேவையான ஊட்டத்தை இந்த மாஸ்க்கிலிருந்து உறிஞ்சுக் கொள்ளும். சுமார் 2- 4 மணி நேரம் ஊறினால் நல்ல பலன் கிடைக்கும். பிறகு ஷாம்பு கொண்டு முடியை அலசுங்கள்.

வாரம் ஒருமுறை இந்த மாஸ்க் பயன்படுத்துங்கள். நேரம் இருப்பவர்கள் வாரம் இருமுறை செய்யலாம்.


விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய். அது கூந்தலை கருமையாக்குகிறது. அடர்த்தியை தருகிறது.


தேன் :

தேன் உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, வறட்சியை தடுக்கிறது. இதிலுள்ள விட்டமின்கள் முடிக்கு போஷாக்கு அளிக்கின்றது.


முட்டை :

முட்டையில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கெரட்டின் உள்ளது. நம் கூந்தல் இந்த சத்துக்களால்தான் ஆனது. கூந்தல் பளபளப்பிற்கும் மஞ்சள் கரு காரணமாகிறது.

இந்த ஹேர் மாஸ்க்கை இரு மாதங்கள் தொடர்ந்து போட்டால், உங்கள் கூந்தல் வளர்ச்சியில் மாற்றம் காண்பீர்கள். எலி வாலாய் இருந்தால்கூட, அடர்த்தி பெற்று, போஷாக்குடன் அழகிய கூந்தலுக்கு சொந்தக்காரி ஆவீர்கள். முயற்சி செய்யுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply