இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 17 சதவீதம் வளர்ச்சி | Tamil Serial Today Org

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 17 சதவீதம் வளர்ச்சி

Loading...

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 17 சதவீதம் வளர்ச்சிசீன ஸ்மார்ட்போன் நிறுவனங் களின் வரவால் இந்திய ஸ்மார்ட் போன் சந்தை நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சத வீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி யடைந்து வருவதன் தொடர்ச்சியாக ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 2.75 கோடி ஸ்மார்ட்போன்கள் விற் பனையாகியுள்ளன. குறிப்பாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான லெனோவா, ஜியோமி, விவோ உள் ளிட்ட நிறுவனங்கள் முக்கிய விற் பனையாளராக உள்ளன என்று ஆய்வு நிறுவனமான ஐடிசி கூறியுள்ளது.
அதற்கு முன் இரண்டு காலாண்டுகளாக சரிந்திருந்த ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி மீண்டும் அதிகரித்துள்ளது. நடப் பாண்டின் முதல் காலாண்டில் 2.35 கோடி ஸ்மார்ட்போன்களை நிறு வனங்கள் விற்பனை செய்துள்ளன.
2015-ம் ஆண்டில் இதே கால கட்டத்தில் 2.65 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப் பட்டன என்றும் ஐடிசி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் 25.1 சதவீத சந்தையைப் பிடித்து சாம்சங் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 12.9 சதவீத சந்தை யைப் பிடித்துள்ள மைக்ரோமேக்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. லெனோவா (7.7%), இண்டெக்ஸ் (7.1%) , ரிலையன்ஸ் ஜியோ (6.8%) சந்தையைப் பிடித்துள்ளன. சாதாரண போன்கள் 3.37 கோடி விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2.6 சதவீதம் அதிகமாகும்.
நுகர்வோர்களின் பயன்பாட்டு தேவைக்கு ஏற்ப தொடர்ந்து சாதாரண போன்கள் விற்பனையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாதாரண போன்களில் லாப வரம்பு அதிகமாக உள்ளது உள்ளிட்ட காரணங்களால் நிறுவனங்கள் சாதாரண போன்கள் விற்பதற்கான வழிகளை அதிகரித்துள்ளன. இதனாலும் சாதாரண போன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐடிசி குறிப்பிட்டுள்ளது.
மூன்றாவது காலாண்டில் பண்டிகை நாட்கள் உள்ளதால் தொடர்ச்சியாக விற்பனை அதிகரிக் கும் வாய்ப்புகள் உள்ளதாக ஐடிசி ஆய்வு வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சர்வதேச மற்றும் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வளர்ச்சி ஆண்டுக்காண்டு சரிந்து வருகிறது. ஆனாலும் சீன நிறுவனங் களான லெனோவா, விவோ, ஜியோமி நிறுவனங்களின் விற் பனை நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 75 சதவீதம் அதிகரித் துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன நிறுவனங்களில் லெனோவா நிறுவனத்தின் விற்பனை கடந்த காலாண்டைவிட 28 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐடிசி இந்தியா நிறுவனத்தின் மூத்த சந்தை ஆய்வாளர் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN