இதய நோயை விரட்டி இதயத்தை பலப்படுத்தும் உணவுப் பொருட்கள்

Loading...

இதய நோயை விரட்டி இதயத்தை பலப்படுத்தும் உணவுப் பொருட்கள்இதய நோய், யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். இதய நோயால் ஏற்படும் திடீர் மரணம் அபாயகரமானது. வாழ்க்கை முறை மாற்றத்தினால், இதயத்துக்கு நலம் தரும் உணவுகளைப் புறக்கணித்து, ரத்த குழாய்களில் கொழுப்பைச் சேர்க்கும் உணவுகளை நாம் பெருக்கிக் கொண்டே போவது தான் இதற்குக் காரணம். நம் இதயத்தை பாதுகாப்பதன் மூலம் நம் ஆயுட்காலத்தை நாமே நீட்டித்துக் கொள்ள இயலும். இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்…….

தினமும் காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக நெல்லிக்காய் சாப்பிடலாம். வெறும் நெல்லிக்காய் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால் ஜுஸ் ஆக குடிக்கலாம். அதுவும் எளிமை தான். நெல்லிக்காய் உடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கலாம். நாட்டு நெல்லிக்காய், மலை நெல்லிக்காய் என்றுக் கூறப்படும் பெரிய நெல்லிக்காய் தான் மருத்துவக் குணமுடையது.

நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல நெல்லிக்காய் கொழுப்பைக் கரைக்குமாம் மற்றும் கல்லீரல், கணையத்தில் புற்றுநோய்களையும் சரி செய்யக்கூடியது. என்னங்க இனி தினமும் நெல்லிக்காய் ஜுஸ் தானே உங்கள் வீட்டில்…

பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைச் சரி செய்யக்கூடிய குணம் உள்ளது. வாயுக் கோளாற்றால் அவதிப்படுபவர்கள் ஒரு முழு பூண்டைத் தீயில் சுட்டு சாப்பிட்டால் உடனடி பலனைக் காணலாம். மேலும் பூண்டு, ரத்தக் குழாயில் உள்ள கொழுப்பைக் கரைப்பதோடு, இதயத்திற்கு வலுவைச் சேர்க்கிறது.

உலர் திராட்சையை பன்னீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் அதை பிசைந்து வடிகட்டி விட்டு அந்த பன்னீரை இதயம் பலவீனமாக உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதைக் குடித்தால் இதய படபடப்பு அடங்கும். அது மட்டுமல்லாது காலப்போக்கில் இதயம் வலுவாகும்.

இஞ்சியை சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். நம்மால் இஞ்சியை அப்படியே சாப்பிட முடியாது. எனவே அதனை துவையலாகவோ அல்லது சாறு எடுத்தோ குடிக்கலாம். இஞ்சி இதய நோயை, ரத்த அழுத்தத்தை, செரிமானக் கோளாறை, மற்ற உடல் கோளாறுகளை சரிசெய்ய வல்லது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply