இஞ்சி சிக்கன்

Loading...

இஞ்சி சிக்கன்

என்னென்ன தேவை?

சிக்கன் – 500 கிராம்

உப்பு – தேவையான அளவு

டார்க் சோயா சாஸ் – 1.5 தேக்கரண்டி

வினிகர் – 1.5 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

தக்காளி கெட்ச்அப் – 4 தேக்கரண்டி

எண்ணெய் – 5 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை – 3 தேக்கரண்டிஅரைக்க…

வெங்காயம் – 2

இஞ்சி – 1/2

பூண்டு – 10எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் துண்டாக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை எடுத்து சிறிதளவு சோயா சாஸ், வினிகர் தூவி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் அதை ஊறவைக்கவும். இப்போது ஒரு ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு எடுத்து நன்றாக மசிக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடான பின் சிக்கனை சேர்த்து நன்றாக வறுக்கவும். இப்போது ஒரு தட்டில் அவற்றை எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், தேவைப்பட்டால் மேலும் எண்ணெய் சேர்த்து மசாலாவை சேர்க்கவும். பச்சை வாசனை போக விட்டு எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

அதில் மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். பின்னர் நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், உப்பு, தக்காளி கெட்ச்அப், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது வறுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடி வேக விடவும். கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply