ஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக வரும்

Loading...

ஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக வரும்பிரிட்டனில் இயங்கி வரும் ‘ஆல்டன் டவர்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவில், ‘ரோலர்கோஸ்டர்’ போன்று நகரும் உணவகத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த உணவகத்தில் நுழைந்து மேஜையில் அமர்ந்தால் மட்டும் போதும், மற்றபடி எல்லாமே பறந்து வரும். அமர்ந்திருக்கும் மேஜையில் இருக்கும் டாப்லெட்டை எடுத்து உணவை ஆர்டர் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்த ஒருசில நிமிடங்களில் உணவு நம்முடைய மேஜைக்கு தானாக வந்துவிடும். உணவகத்தில் இருக்கும் எல்லா மேஜைகளிலும் ‘ரோலர்கோஸ்டர்’ போன்ற சுருள் வடிவ நகரும் அமைப்பு பொறுத்தப்பட்டிருப்பதால், சமையல் அறையில் இருந்து அனுப்பப்படும் உணவு நேராக ஆர்டர் செய்தவரின் மேஜைக்கே வந்துவிடுகிறது.
சுருள் அமைப்பு என்பதால் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு தலைகீழாக நகரும் போது கொட்டிவிடாமல் இருக்க பிளாஸ்டிக் இலைகளால் மூடி அனுப்புகிறார்கள். கூடவே ஒருசில இலவச உணவுகளும் உண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply