ஆரோக்கியமான கண் பார்வைக்கு சில அசத்தலான டிப்ஸ்

Loading...

ஆரோக்கியமான கண் பார்வைக்கு சில அசத்தலான டிப்ஸ்ஐம்புலன்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கண்கள். அத்தகைய கண்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை உடனே கவனித்து சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அப்படி கண்களில் பிரச்சனை ஏற்படும் வரை காத்திருக்காமல், கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் செயல்களை ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றினால், கண்களில் பிரச்சனை வருவதைத் தடுக்கலாம்.

அதற்கு கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் காய்கறிகளை தவறாமல் அன்றாடம் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், கண்ணாடி அணிவதை சுலபமாக தவிர்க்கலாம். சரி, இப்போது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

* கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வைட்டமின் சி, ஈ, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். முக்கியமாக வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்து கண்ணையும், மூளையையும் இணைக்கக்கூடியவை.

* கேரட் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் கேரட்டில் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது.

* கீரைகள் கண்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் அகத்திக்கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. ஆகவே இந்த கீரையை தவறாமல் வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அலுவலகம் செல்பவர்கள் காய்கறிகளான கேரட், வெள்ளரிக்காயுடன் பழங்களை சேர்த்து சாலட் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இடைவேளை நேரங்களில் சாப்பிட்டு வந்தால், கண்கள் குளிர்ச்சியுடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply