ஆயுளை நீட்டிக்கும் பச்சை மிளகாய்

Loading...

ஆயுளை நீட்டிக்கும் பச்சை மிளகாய்தினசரி சமையலில் காரத்திற்காக நாம் மிளகாய் தூள், பச்சை மிளகாய், வர மிளகாய் போன்றவற்றை சேர்ப்போம். இதில் மிளகாய் தூள் மற்றும் வரமிளகாயை விட, பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம் என்பது தெரியுமா?

ஆம், சீன ஆராய்ச்சியாளர்கள், காரமான (பச்சை மிளகாய் சேர்த்த) உணவுகளை வாரத்திற்கு 2 முறை உட்கொள்வதால் இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்தது மற்றும் வாரத்திற்கு 4-7 நாட்கள் கார உணவுகளை உட்கொள்வதால் 14 சதவீதம் இறப்பு வீதம் குறைந்திருப்பது தெரிய வந்தது.

இதற்கு பச்சை மிளகாயில் உள்ள சக்தியை வாய்ந்த உட்பொருட்கள் தான் காரணம். இதனால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் விரைவில் குணமாகிறதாம். இங்கு தினமும் உணவில் பச்சை மிளகாயை சேர்ப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

பச்சை மிளகாயில் ஆரஞ்சு பழத்தில் உள்ளது போன்றே வளமான அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அப்பிரச்சனைகள் உடனே விலகும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பளிக்கும்.கலோரிகள் இல்லை

பச்சை மிளகாயில் கலோரிகள் சுத்தமாக இல்லை. மேலும் இதனை அன்றாட உணவில் சேர்த்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் தான் கரைக்கப்படும். இதனால் உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.இரத்த சர்க்கரை அளவு குறையும்

பச்சை மிளகாய் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின், பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும்.நல்ல செரிமானம்

பச்சை மிளகாயில் ஏராளமான அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. ஆகவே உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், தினசரி உணவில் பச்சை மிளகாயை சேர்த்து வாருங்கள். இதன் மூலம் உங்கள் செரிமானம் சீராக இருக்கும். குறிப்பாக ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகவும் பச்சை மிளகாயை சாப்பிட வேண்டாம்.மன அழுத்தத்தை நீக்கும்

பச்சை மிளகாய் சேர்த்த உணவை உட்கொள்ளும் போது, மூளையில் எண்டோர்பின்கள் வெளியிடப்பட்டு, நல்ல மனநிலையை உணர வைக்கும். இதன் மூலம் மன அழுத்தத்தினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கலாம்.பாக்டீரியா தொற்றுகள் தடுக்கப்படும்

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. ஆகவே இந்த பச்சை மிளகாயை உட்கொள்வதால் உடலில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும்.புற்றுநோய்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், புற்றுநோயின் வளர்ச்சியை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக ஆண்கள் பச்சைமிளகாய் சேர்த்த உணவை உட்கொள்வதால், அவர்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து விடுபட உதவும்.இரும்புச்சத்து

உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அன்றாட உணவில் பச்சை மிளகாயை சேர்த்து வாருங்கள். ஏனெனில் பச்சை மிளகாயில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளது.சரும அழகு மேம்படும்

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. இது சருமத்தில் சுரக்கும் இயற்கை எண்ணெய்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமானது. சருமத்தில் இந்த இயற்கை எண்ணெய் போதிய அளவில் இருந்தாலே சருமம் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply