ஆப்பிள் போன் அன்லாக் விவகாரம் தொடரும் பிரச்சனைகள்

Loading...

ஆப்பிள் போன் அன்லாக் விவகாரம் தொடரும் பிரச்சனைகள்நியூ யார்க்கில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் ஐஃபோன் ஒன்றை ஆன்லாக் செய்வதற்கு உதவுமாறு ஆப்பிள் நிறுவனத்தை சட்டரீதியாக எதிர் கொண்டுவந்த அமெரிக்க அதிகாரிகள் அந்த வழக்கை கைவிட்டுள்ளனர்.

அந்த ஐஃபோனை திறப்பதற்கு தேவையான இரகசியக் குறியீட்டை சிலர் கொடுத்து உதவியதை அடுத்து ஆப்பிள் நிறுனத்தின் உதவி அது தொடர்பில் இனிமேல் தேவையில்லை என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

காலிஃபோர்ணியா சான் பெர்னார்டினோவில் கடந்த டிசம்பரில் 14 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரி ஒருவரின் ஐஃபோனை ஆன்லாக் செய்ய உதவுமாறு ஆப்பிள் நிறுவனத்தை சட்டரீதியாக எதிர் கொண்டிருந்த அமெரிக்க உளவுத் துறையான எஃப் பி ஐ கடந்த மாதம் அதனை கைவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நியூ யார்க்கில் போதைப்பொருள் கடத்தல் காரரின் வழக்கில் சம்மந்தப்பட்டிருந்த ஐஃபோன் வித்தியாசமான மாடலாக இருந்தபோதிலும் இந்த இரண்டு ஃபோன்களையும் ஒரே தொழில்நுட்பம் கொண்டே அமெரிக்க அதிகாரிகள் ஆன்லாக் செய்திருக்க கூடும் என ஆப்பிள் கூறுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply