ஆன்லைன் மூலம் துப்பாக்கி விற்க பேஸ்புக் தடை

Loading...

ஆன்லைன் மூலம் துப்பாக்கி விற்க பேஸ்புக் தடைஆன்லைன் மூலம் துப்பாக்கி விற்க பேஸ்புக் தடை விதித்துள்ளது.

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிலையில் ‘பேஸ்புக்’கின் இன்ஸ்டாகிராம் எனப்படும் ஆன்லைன் மூலம் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டன.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில் அதை ஒழிக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிபர் ஒபாமா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று ‘பேஸ்புக்’ மூலம் துப்பாக்கி விற்பனை செய்ய தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை ‘பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக வலைதளங்களில் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வகையில் புது புது வசதிகள் மற்றும் தொழில் நுட்பங்களை தொடர்ந்து உருவாக்கி அளித்து வருகிறோம். அதே நேரத்தில் மனிதகுல நன்மைக்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது.

எனவே தனிநபர்கள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிகளை விற்பனை செய்ய எங்களது வலைதலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ‘பேஸ்புக்’கில் மரிஜுவானா போதைப் பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply