ஆனியன் சமோஸா

Loading...

ஆனியன் சமோஸா
மேல் மாவுக்குத் தேவையான பொருட்கள்

கோதுமை மாவு -1/2கப்
மைதா மாவு/ஆல் பர்ப்பஸ் மாவு -1/2கப்
உப்பு- 1/4டீஸ்பூன்
தண்ணீர் – 1/2கப்புக்கும் குறைவாக
எண்ணெய் – 2 டீஸ்பூன்


ஸ்டஃபிங்-கு தேவையான பொருட்கள்

நறுக்கிய வெங்காயம் -1/
அவல் -1/4கப்
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகத்தூள் -1/2டீஸ்பூன்
உப்பு-சிறிது
சாட் மசாலா (அ) எலுமிச்சை சாறு -சிறிது (விரும்பினால்)

பஃப்ஸை மடித்து,ஒட்டுவதற்கு..

மைதா -1டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

1. மாவுகள், உப்பு இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு..
2.கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயும் விட்டு நன்றாக 5 நிமிடங்கள் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
3. மாவை சம அளவில் நான்காகப் பிரித்து…
4. உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.
5. தோசைக்கல்லை காயவிட்டு, தேய்த்த சப்பாத்திகளை சூடான கல்லில் சிலவிநாடிகள் போட்டு, திருப்பி விட்டு சில விநாடிகளில் எடுத்துவிடவும். (மொத்தமே 20-30 விநாடிகள் தோசைக்கல்லில் இருந்தால் போதுமானது)
6. ஸ்டஃபிங்-கிற்கு தேவையான வெங்காயம்,அவல், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை ஒன்றாக கலந்து வைத்துவிடவும். (நான் சாட் மசாலா/எலுமிச்சை ஜூஸ் எதுவும் சேர்க்கவில்லை, விரும்பினால் அதையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.
7. சப்பாத்திகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு, சீரான செவ்வகத் துண்டுகளாக வெட்டவும். (3×6 செ.மீ. வெட்டினால் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்லறாங்க, நான் அளந்தெல்லாம் பார்க்கலை! 😉 )
8.இதே போல எல்லா சப்பாத்திகளையும் நறுக்கிக் கொள்ளவும்.
9. ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலந்துவைக்கவும். செவ்வகத்துண்டை ஒரு ஓரத்திலிருந்து மடித்துவிட்டு மீதியுள்ள ஓரத்தில் மைதா பசையைத் தடவவும்.
10. பசை தடவிய பக்கத்தை மடித்து ஒட்டவும். இப்போது அதனை கையில் எடுத்துப் பார்த்தால் ஒரு கோன் வடிவம் கிடைத்திருக்கும்.
11. வெங்காயக் கலவையை கோனில் நிரப்பி,
12. மீதியுள்ள பக்கத்தில் மைதா பேஸ்ட்டை தடவி,
13. இறுக்கமாக ஒட்டவும். இப்போது அழகான (!) முக்கோண வடிவில் பஃப்ஸ் தயாராகியிருக்கும்.
14. எல்லா செவ்வகத்துண்டுகளையும் பஃப்ஸாக செய்துவைக்கவும். மடித்த பஃப்ஸ்களை காய்ந்து போகாமல் மூடிவைக்க வேண்டியது அவசியம்.
15. மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, பஃப்ஸ்களை பொரிக்கவும்.
16.சில நிமிடங்களில் லேசாக நிறம் மாறியதும், பஃப்ஸ்களை எடுத்துவைக்கவும்.
17. எல்லா பஃப்ஸ்களையும் அரைவேக்காடாக எடுத்து வைத்தவுடன், மீண்டும் அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (இரண்டு முறை பொரிப்பது ஆப்ஷனல்..நல்லா முறுகலா வருவதற்காக அப்படி செய்வது, இல்லையெனில் ஒரே முறையிலும் பொரித்து எடுத்துவிடலாம்.)
சுவையான மொறு மொறு பஃப்ஸ் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply