ஆண்களை சுறுசுறுப்பாக்கும் அமுக்கரா கிழங்கு

Loading...

ஆண்களை சுறுசுறுப்பாக்கும் அமுக்கரா கிழங்குமன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள் மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
மன– உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கரா கிழங்கு. உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது.
இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை– கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.
கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது மனஅழுத்தம் தோன்றும். அதனால் மூளையில் மந்தநிலை உருவாகி, அதன் ஆற்றல் குறையும். அப்போது உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களில் சமச்சீரற்றதன்மை உருவாகும். அதனால் உடல் இயக்கம் சீர்கெட்டு, பல்வேறுவிதமான நோய்கள் தோன்றும். அமுக்கரா கிழங்கு, கார்டிசால் ஹார்மோன் சுரப்பை 26 சதவீதத்திற்கு குறைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும். ஹார்மோன் சமச்சீரின்மையால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தை பேறின்மை போன்றவை ஏற்படும். அதையும் இந்த கிழங்கு சீர்செய்யும். ஆண்களுக்கு இளமையிலேயே ஏற்படும் தலை வழுக்கை, ஆண்மைக் குறைபாடு போன்றவைகளையும் சரிசெய்யும்.
புற்று நோயால் சிலருக்கு கட்டிகள் ஏற்படும். அதை அமுக்கரா கிழங்கு கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் அதிகப்பட்டால் நரம்புகள் பாதிக்கப்படும். உள்ளங் காலில் ஒருவித மதமதப்புதன்மை தோன்றும். கால் எரிச்சலும் தோன்றும். ஞாபக மறதி, கை–கால் நடுக்கம் போன்றவைகளும் தோன்றும். அவைகளுக்கு அமுக்கரா கிழங்கில் செய்த மருந்துகள் பலனளிக்கின்றன. அமுக்கரா சூரணம், மாத்திரை, லேகியம் போன்றவை சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே இதனை சாப்பிடவேண்டும்.
இட்லி அவிக்கும் பாத்திரத்தில் அரைலிட்டர் பாலுடன் சிறிதளவு நீர் கலந்து ஊற்ற வேண்டும். மேல்தட்டில் ஒரு துணியை விரித்து அதில் அமுக்கரா கிழங்குகளை பரப்பி வேக வைக்கவேண்டும். பின்பு அவைகளை உலர்த்தி தூளாக்கிக்கொள்ளவேண்டும். இதுவே அமுக்கரா பொடியாகும். அதனை சேமித்து வைத்து தேவைக்கு பயன்படுத்தவேண்டும்.
அமுக்கரா பால்
(இரண்டு பேருக்கு போதுமானது)
அமுக்கரா பொடி – 1 தேக்கரண்டி
பாதாம் பருப்பு – 5
சாரைப் பருப்பு – 1 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
காய்ச்சிய பால் – 500 மி.லி.
பனங்கற்கண்டு – தேவைக்கு

செய்முறை:

* பாதாம்பருப்பு, சாரைப் பருப்பு, கசகசா ஆகியவைகளை இருபது நிமிடம் நீரில் ஊற வைத்து, அரைக்கவும்.
* அடிகனமான பாத்திரத்தில் அரைத்த கலவை, அமுக்கரா பொடி, பனங்கற்கண்டு, பால் ஆகியவைகளை சேர்த்து, சிறு தீயில் 3 நிமிடம் சுட வையுங்கள்.
* இளம் சூட்டில் காலை, மாலை 200 மி.லி. வீதம் பருகுங்கள்.
* இது இளமையை மீட்டுத் தரும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும். மனசோர்வு மற்றும் தூக்கமின்மையை நீங்கும். மூளையை சுறுசுறுப்பாக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் நிலையில் இருக்கும் பெண்களுக்கும் இது அதிக சக்தியை தரும். விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்றது.
அமுக்கரா நெய்
அமுக்கரா பொடி – 10 கிராம்
நெய் – 100 கிராம்
காய்ச்சிய பால் – 1000 மி.லி.

செய்முறை:

* நெய்யை உருக்குங்கள்.
* பாத்திரத்தில் சிறிது நீர் கலந்து அமுக்கரா பொடியை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். பின்பு அதில் நெய், பால் கலந்து சிறு தீயில் நன்கு காய்ச்சவேண்டும். நீர் வெளியேறி ஈரப்பதம் நீங்கி நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
* பதத்திற்கு வந்த பின்பு இறக்கி, ஆறவைத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* இது குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. ஒரு தேக்கரண்டி வீதம் காலையும், மாலையும் கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஊட்டம் பெறும். மூளைத்திறன் அதிகரித்து குழந்தைகள் சுறுசுறுப்பாவார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply