ஆண்களின் சிறுநீருடன் விந்தணு வெளிவருவதற்கான காரணங்கள்

Loading...

ஆண்களின் சிறுநீருடன் விந்தணு வெளிவருவதற்கான காரணங்கள்பொதுவாக ஆண்களுக்கு சிறுநீர் வழியாக விந்தணு வெளியேறுவது அரிதான ஒன்றே. ஆனால் இவை நடப்பதற்கு இரண்டு பொதுவான காரணங்கள் உள்ளன. ஒன்று சுக்கியன் அழற்சி என்ற மருத்துவ பிரச்சனையால் ஏற்படுவது. இது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைவதால் இந்நிலை ஏற்படும். மற்றொன்று, பிற்போக்கு விந்துதள்ளல்.

அதாவது விந்துதள்ளல் ஏற்படும் போது விந்தணு ஓட்டம் பின்னோக்கி இருந்து, மாட்டிக் கொள்வதால் உண்டாவது. இது சிறுநீர்ப்பை பிரச்சனைகளால் ஏற்படுவது. இந்த இரண்டு நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம். இருப்பினும் அது வரைக்கும் அசௌகரியமும் வலியும் ஏற்படலாம். இப்பிரச்சனை மிக தீவிரமாக மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வேறு ஏதோ பெரிய பிரச்சனை என்பதற்கான அறிகுறி இது. தங்கள் சிறுநீரில் விந்தணுவும் சேர்ந்து வெளியேறுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் இந்த பிரச்சனையின் காரணத்தை கண்டுபிடிக்க உடனே ஒரு மருத்துவரின் உதவியை நாடிடுங்கள்.

பொதுவாக வெளியேறுவது விந்தணுவா என்பதை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறும் சளி அல்லது பஸ் ஆகியவற்றை பார்க்கும் போது, அதுவும் கூட விந்தணு போலவே தெரியும்.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் பொதுவாக ஆண்கள் போதிய அளவில் விந்துதள்ளலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது வளர்ச்சியடைய சில காலம் ஆனாலும் கூட, காம உணர்வு ஏற்படும் போது, உடலுறவில் ஈடுபடாமல் போனாலோ அல்லது சுயஇன்பம் காணாமல் போனாலோ, உங்கள் புரோஸ்டேட் சுரப்பியில் அளவுக்கு அதிகமான விந்தணு சேர்ந்துவிடும்.

இது ஒன்றும் ஆபத்தான விஷயம் இல்லை தான். இப்படி தேங்குவதால் புரோஸ்டேட் சுரப்பி வெடித்து விடும் என்றெல்லாம் கிடையாது. இதற்கு சரியான தீர்வு, விந்துதள்ளல் தான். அப்படி நடக்கும் போது வீக்கமும் மெதுவாக குறையத் தொடங்கும்.

பிற்போக்கு விந்துதள்ளல் சிறுநீரில் விந்தணு வெளியேறுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக கருதப்படுவது பிற்போக்கு விந்துதள்ளல். வடிகுழாய் வழியாக உடலை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக சிறுநீர்ப்பைக்குள் விந்தணு பின்னோக்கி செல்லும் நிலையே இது. விந்துதள்ளலின் போது சிறுநீரையும் விந்தணுவையும் பிரிக்க நடைபெறும் சிறுநீர்ப்பை சுருக்கம் நடைபெறாததால் ஏற்படுவதே இந்த நிலை. இந்த நிலையால் அவதிப்படும் ஆண்கள் உடலுறவை கொண்ட உடனேயே சிறுநீர் கழிக்கும் போது அதனை மேகமூட்டம் போல் காணலாம். ஆனால் மற்ற நேரங்களில் அப்படி பார்க்க முடிவதில்லை.

விந்துதள்ளல் பிரச்சனைக்கான சிகிச்சையும் தடுப்பும் பிற்போக்கு விந்துதள்ளல் பிரச்சனைக்கும் கூட சில பொதுவான சிகிச்சைகள் உள்ளது. சில மருந்துகளை உண்ணுவதால், விந்துதள்ளலின் போது விந்தணுவும் சிறுநீரும் கலக்காமல் பார்த்துக் கொள்ளும் சிறுநீர்ப்பை. இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சையின் போது துளை போட வேண்டியிருக்கும்.

இருப்பினும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் மீட்பு காலமும் உங்களை போராட வைத்துவிடும். அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம். அதேப்போல் அறுவை சிகிச்சை என்பது எப்போதுமே சரியாக அமையாது. அது பல எச்சரிக்கைகளை ஏற்படுத்தும். நிறைந்த சிறுநீர்ப்பையுடன் உடலுறவில் ஈடுபடுவதும் கூட ஒரு தீர்வாக அமையும். ஆனால் இப்படி செய்யும் போது உடலுறவை அனுபவிக்க முடியாது.

பெண்களுக்கான பரிசீலனைகள் உடலுறவை முடித்த உடனேயே தங்களின் சிறுநீரில் பெண்களுக்கு விந்தணு இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் விந்து, வடிகுழாய்க்குள் நுழைவதில்லை. பெண்கள் தங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்யும் போது, போகும் வழியில் அது கலக்கவே செய்யும். இது பொதுவாக ஒன்றும் பிரச்சனை கிடையாது. கருவுறும் தன்மையை இது பாதிக்காது. அதேப்போல் கர்ப்பமாகும் வாய்ப்பையும் அது பாதிக்காது. உடலுறவுக்கு பிறகு விந்து கசிவது இயல்பு தான். கருவுறும் பாதையை தவிர பிற பாதைக்குள் விந்தணு செல்வதை அல்லது நீண்ட நேரம் வைத்திருப்பதை பெண்களின் உடல் அனுமதிப்பதில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply