ஆட்டு ஈரல் கூட்டு

Loading...

ஆட்டு ஈரல் கூட்டு
தேவையானப் பொருட்கள்

ஈரல் – கால் கிலோ
எண்ணை – முன்று தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்ச மிளகாய் – இரண்டு
மிளகாய் தூள் – ஒரு கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேகரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேகரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது


செய்முறை

ஈரலை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும்
ஒரு வானலியில் எண்ணையை காய வைத்து வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும் பிறகு ஈரலை போட்டு பிறட்டி, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அரைத்து ஊற்றி பச்ச மிளகாயை உடைத்து போடவும். போட்டு மாசாலா முழுவதும் ஈரலில் பிடிக்கும் வரை ஒரு கிளறு கிளறி சிம்மில்ல் வைத்து ஐந்து நிமிடத்தில் கொத்து மல்லி தழை தூவி இறக்கிவிடவேண்டியது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply