அழகினை கெடுக்கும் கரும்புள்ளி தீர்க்க என்ன வழி

Loading...

அழகினை கெடுக்கும் கரும்புள்ளி. தீர்க்க என்ன வழிபொதுவாக பெண்கள் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.
ஆனால் சில பெண்களுக்கு இளம் வயதிலே முக அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு அழகை கெடுக்கும். எனவே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வை இங்கு காண்போம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நறுக்கி,பின் அதை அரைத்து பேஸ்ட்டாக, முகத்தில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையை பேஸ்ட்டாக நன்கு அரைத்து பின்பு அதை முகத்தில் தடவி காய்ந்தப்பின் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை கிடைக்கும்.

ஓட்ஸ் பவுடர்

ஓட்ஸை பவுடர் செய்து, அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைவதை காணலாம்.

தக்காளி

தக்காளியை பேஸ்ட்டாக அரைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.இதனை பின்பற்றினால் விரைவில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.


கோதுமை

கோதுமை மாவுடன் பால் சேர்த்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வர விரைவில் குணமாகும்.

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து அதை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறைந்துப் போகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply