அழகான அடர்த்தியான புருவம்

Loading...

அழகான, அடர்த்தியான புருவம்அழகான, அடர்த்தியான புருவம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அப்படியான புருவ அமைப்பு இயற்கையிலேயே அமைந்திருக்கும். அவர்களை போல அடர்த்தியான புருவ அமைப்பை பெற கீழே உள்ள டிப்ஸை பின்பற்றினாலே போதும்.


விளக்கெண்ணெய்

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெய்யும், ஆலிவ் எண்ணெய்யும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் உள்பட ஏதேனும் ஒரு எண்ணையை கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும். எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விடவேண்டும்.


தேங்காய் எண்ணெய்

எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்ய புருவங்கள் அழகாக உதவும்.


திரெட்டிங்

புருவங்களை எப்போதும் திரெட்டிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடது தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக்கூடும்.


பால்

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை ஊற்றி அதில் பஞ்சை நனைத்து புருவங்களில் மெதுவாக தடவவும். சிறிது கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.


ஆலிவ் ஆயில் மற்றும் தேன்

அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயிலுடன் சிறுது தேனை கலந்து புருவங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். நேரம் தேனை புருவங்களில் தடவினால் புருவ முடி நரைத்து விடும். இதனுடன் ஆலிவ் ஆயிலை கலப்பதால் நரைக்கும் என்ற பயம் வேண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply