அழகாக செல்பீ எடுப்பதற்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Loading...

அழகாக செல்பீ எடுப்பதற்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பெரும்பாலானோரின் முக்கிய ஆசை அவைகளை கொண்டு சிறப்பான செல்பீ எடுப்பதே ஆகும். ஃபேஸ்புக்கில் செல்பீ போட்டு கடுப்பேற்றுபவர்களை பழி வாங்கவே இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர் என்றும் கூறலாம்.

நிலைமை இப்படி இருக்க அனைவரையும் அழகாக காட்டும் செல்பீ கேமரா கொண்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என உங்களுக்கு தெரியுமா. செல்பீ ப்ரியர்கள் மற்றும் அழகான புகைப்படம் எடுக்க தகுந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பாருங்கள்.ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவயில் 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருக்கின்றது. வழக்கமான ஆப்பிள் தரம் இதன் புகைப்படங்களில் நன்றாகவே பிரதிபலிக்கின்றது என்றே கூற வேண்டும்.சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 5 கருவியில் 16 எம்பி ப்ரைமரி மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிற இந்த கேமராவில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் அனைத்து புகைப்படங்களையும் அழகூட்டுகின்றது என்றே கூற வேண்டும்.ஜியோனி ஈலைஃப் ஈ7 மினி

இந்த கருவியின் அட்டகாசமான அம்சமாக கேமரா இருக்கின்றது. 13 எம்பி சுழலும் கேமரா கொண்டிருக்கின்றது. இதனால் ஒரே கேமரா ஆனால் இடத்திற்கு தகுந்தார் போல் புகைப்படங்களை எடுக்க முடியும்.கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்

ரூ.28,000 பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த கருவியில் முக்கிய அம்சமாக கேமரா இருக்கின்றது. 13 எம்பி ப்ரைமரி மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருப்பதால் அழகான செல்பீ எடுப்பதோடு வீடியோ கால் செய்யவும் இந்த கருவி தலைசிறந்த ஒன்றாக இருக்கின்றது.சோனி எக்ஸ்பீரியா சி3

சந்தையில் கிடைக்கும் இந்த கருவியை கொண்டு அழகான புகைப்படங்ளை எடுக்க முடியும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் 5 எம்பி முன்பக்க கேமராவில் வைடு ஆங்கிள் வழங்கப்பட்டிருப்பதால் செல்பீ புகைப்படங்களை அதிக அழகாக எடுப்பதோடு துள்ளியமாகவும் எடுக்க முடியும்.சாம்சங் கேலக்ஸி ஈ7

இந்த கருவியின் முக்கிய அம்சமே இதன் கேமரா என கூறலாம். 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு இதில் வழங்கப்பட்டிருக்கும் கேமரா அம்சங்கள் புகைப்படங்களை இன்னும் அழகாக்கும்.எச்டிசி ஒன் எம்8

இந்த கருவியின் விலை சற்றே அதிகம் என்றாலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் 5 எம்பி முன் பக்க கேமரா மூலம் எச்டிஆர் தரத்தில் செல்பீ எடுக்க முடியும். மேலும் இந்த கருவியின் எடை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply