அல்ஸைமர் நோய் வலி நிவாரணி கண்டுபிடிப்பு | Tamil Serial Today Org

அல்ஸைமர் நோய் வலி நிவாரணி கண்டுபிடிப்பு

ads 1

அல்ஸைமர் நோய் வலி நிவாரணி கண்டுபிடிப்புஅல்ஸைமர் நோய் என்பது நினைவாற்றலில் ஏற்படும் பாதிப்பை குறிப்பதாகும். இந் நோயைக் குணப்படுத்தக்கூடிய நிவாரணிகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறிருக்கையில் வலி நிவாரணி மருந்தானது அல்ஸைமர் நோயின் குணங்குறிகளை நீக்கிய சம்பவம் ஒன்று எதிர்பாராத விதமாக இடம்பெற்றுள்ளது.
Mefenamic அசிட் என்பது ஸ்ரெரோயிட்கள் அற்ற ஒரு மாத்திரையாகும். இது அனேகமாக அழற்சிகளில் இருந்து விடுபட பயன்படுத்தப்படும்.
இருந்த போதிலும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குணப்படுத்தவும் இம் மாத்திரை பயன்படுத்தப்படுகின்றது.
இந்த மாத்திரையைப் பயன்படுத்தியே அல்ஸைமர் நோய் அறிகுறிகளை இல்லாது செய்ததாக மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை முதன் முதலாக எலிகளில் பயன்படுத்தியிருந்த நிலையில் அவற்றின் நிறைவாற்றல் தன்மையில் சிறந்த முன்னேற்றம் தெரிந்ததாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
NLRP3 எனும் வேதிப் பொருளானது மூளைக் கலங்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்துவதனாலேயே அல்ஸைமர் நோய் ஏற்படுத்துகின்றது.
இந்த வேதிப்பொருளுக்கு எதிராக செயற்படுவதன் மூலம் குறித்த நோய் நிவாரணியானது அல்ஸைமர் நோயை தடுக்கின்றது.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11