அரிசி பருப்பு சாதம்

Loading...

அரிசி பருப்பு சாதம்
தேவையானப் பொருட்கள்

அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
நெய் – 2 டீஸ்பூன்


செய்முறை

முதலில், அரிசி மற்றும் பருப்பை தண்ணீரில் நன்றாகக் கழுவி, அவற்றை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம் பொட்டு தாளித்து, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

ஊற வைத்துள்ள அரிசி, பருப்பை வடிகட்டி விட்டு, குக்கரில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நன்கு கிளறியதும், அதில் சாம்பார் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

அடுத்ததாக, தண்ணீர் சேர்க்க வேண்டும். அதுவும் அரிசி, பருப்பை விட 3 மடங்கு அதிகமான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
குக்கர் 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி வேண்டும்.

இறுதியாக இறக்கியதும் கொத்தமல்லி, நெய் சேர்த்து கிளறினால் பரிமாறத் தேவையான சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்….

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply