அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள IPHONE 6 SE | Tamil Serial Today Org

அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள IPHONE 6 SE

அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள IPHONE 6 SEஅப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தகவல்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குறித்த கைப்பேசியானது iPhone 7 எனும் பெயருடனயே அறிமுகம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவ்வாறில்லாமல் iPhone 6 SE என்ற பெயருடனேயே குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கைப்பேசியில் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் கைப்பேசியின் வடிவமைப்பில் சிறிய மாற்றம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், அதனால்தான் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் புதிய தகவலை உறுதிப்படுத்தக்கூடிய சில புகைப்படங்களும் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
எது எவ்வாறெனினும் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Loading...
Rates : 0
VTST BN