அப்பிள் நிறுவனத்தின் புதிய APPLE PAY வசதி

Loading...

அப்பிள் நிறுவனத்தின் புதிய APPLE PAY வசதிஅப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்கள் உட்பட ஏனைய உற்பத்திகளை பயனர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.
பலத்த வரவேற்பைப் பெற்ற இவ் வசதி உலகின் பல பாகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்த வேளை பாரிய சிக்கலை அப்பிள் நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது.
அதாவது அவுஸ்திரேலியாவை சேர்ந்த குறித்த சில வங்கிகள் Apple Pay முறையினை ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு காரணம் அத் தொழில்நுட்பத்தினை குறித்த வங்கிகள் விளங்கிக்கொள்ளாமையே என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இத் திட்டத்தினை அமல்ப் படுத்துவதற்கான பிரேரணையில் கைச்சாத்திட்ட போதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அவ் வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
இதேவேளை Apple Pay முறைமை எவ்வாறு செயல்படுகின்றது என்ற தெளிவினைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவுஸ்திரேலியாவிலும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply