அப்பளக் குழம்பு | Tamil Serial Today Org

அப்பளக் குழம்பு

அப்பளக் குழம்பு
தேவையான பொருட்கள்:
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,சின்ன பூண்டு – 10 பல்,சின்ன வெங்காயம் – 10, உளுந்து அப்பளம் – 2,காய்ந்த மிளகாய் – ஒன்று,சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா கால் ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு, அப்பளத்தை பிய்த்து துண்டுகளாக்கி சேர்க்கவும்.பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கி, புளித் தண்ணீரை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.சுவையான அப்பளக்குழம்பு ரெடி.

ads
Rates : 0