அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட துணை அப்பிள் நிறுவனம் சீனாவில்

Loading...

அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட துணை அப்பிள் நிறுவனம் சீனாவில்ஐபோன்கள், ஐபேட்கள், மடிக்கணணிகள் உட்பட மேக் கணணிகள் என பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற நிறுவனமாக அப்பிள் திகழ்கின்றது.
இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் சிறந்த தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நோக்கிலும், மேலும் பல புதிய சாதனங்களை வடிவமைக்கும் நோக்கிலும் புதிய முயற்சியில் அந் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட துணை நிறுவனம் ஒன்றினை இவ்வருட இறுதிக்குள் சீனாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை அப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அண்மையில் அவர் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.ஆனால் இதுவரை அதற்கான எந்த ஆரம்ப பணிகளும் இடம்பெறவில்லை.
எனினும் விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படலாம் எனவும், அது தொடர்பான மேலதிக தகவல்களும் எதிர்காலத்தில் வெளியாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply