அன்றாட உணவில் அரிசியை சேர்ப்பது ஆரோக்கியம் தானா

Loading...

அன்றாட உணவில் அரிசியை சேர்ப்பது ஆரோக்கியம் தானாஅரிசி என்பது நமது பாரம்பரிய உணவுப் பொருள். சமீப காலமாக மக்கள் மத்தியில் அரிசி பற்றிய சில தவறான எண்ணம் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் அரிசியை உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து, கோதுமை உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அரிசி உட்கொள்வதை நிறுத்தினால் உடல் எடை குறையும் என்பது தான். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. ஆகவே இப்போது அரிசியின் வகைகளையும், அதன் நன்மைகளையும் பார்ப்போம்.

* அரிசியில் ஒரு வகையான மணிச்சம்பா அரிசியை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

* செங்குறுவை என்னும் சிவப்பு நிற அரிசியிலும், கருங்குறுவை என்னும் கருப்பு நிற அரிசியிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை உயிரணுக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும்.

* நன்கு குண்டு குண்டாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இந்த வகை அரிசி வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். அதேப்போல் இது செரிமானமாகவும் அதிக நேரம் ஆகும்.

* மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து சாப்பிட்டால், உடலின் வலிமையும், உறுதியும் அதிகரிக்கும். மேலும் இதில் புரோட்டீன், நார்ச்சத்து, உப்புச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது.

* உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், பச்சரிசி எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அப்போது புழுங்கல் அரிசியை எடுத்துக் கொண்டால், எளிதில் செரிமானமாகும்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நீளச்சம்பா நல்லது. நல்ல பொலிவான சருமத்தைப் பெற அன்னம் அழகி சிறந்தது. வாத நோயால் அவஸ்தைப்படுபவர்கள் சீரகச்சம்பா அரிசியை உட்கொண்டு வந்தால், அதனைப் போக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply