அன்ரோயிட். இயங்குதளம் மீது குற்றச்சாட்டு

Loading...

அன்ரோயிட். இயங்குதளம் மீது குற்றச்சாட்டுகூகுள் நிறுவனத்தினால் மொபைல் சாதனங்கள் தொடங்கி குரோம்புக் வரையான மடிக்கணிகளுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம்தான் அன்ரோயிட்.
இவ் இயங்குதளம் குறுகிய காலத்திலே பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ஏனைய இயங்குதளங்களுக்கு சவால் விடும் வகையில் பல மில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்படியிருக்கையில் ரஷ்ய நிறுவனம் ஒன்று இவ் இயங்குதளம் பாதுகாப்பற்றது என்ற கோணத்தில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தது.
இது தொடர்பாக ரஸ்யாவின் Federation Antimonopoly Service ஊடாக 6.8 மில்லியன் டொலர்கள் அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம் தமக்கு குறித்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றமையை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் எதுவிதமான தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை இவ்வாறான ஒரு பிரச்சினையை ஐரோப்பாவிலும் கூகுள் நிறுவனம் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN