அட்டகாச அம்சங்களுடன் வெளியானது Yu Yunicorn ஸ்மார்ட் மொபைல்

Loading...

அட்டகாச அம்சங்களுடன் வெளியானது Yu Yunicorn ஸ்மார்ட் மொபைல்Yu Televentures நிறுவனம் தனது Yu Yunicorn ஸ்மார்ட் மொபைலை Micromax நிறுவனத்தின் துணையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மொபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் சில முக்கிய அம்சங்கள் பயனர்களுக்கு புதிய ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

MediaTek Helio P10 chipsetவுடன் 4 processors கொண்டு இயங்கும் இது 4GB RAM கொண்டுள்ளது. 30 சதவீதம் வரை பேட்டரியை சேமித்துக் கொள்ளக் கூடிய அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது.

மேலும், 32GB சேமிப்பு திறனுடன் உள்ள இந்த மொபைல் போனில் 128GB வரை சேமிப்பு திறனை நீடித்துக் கொள்ள முடியும்.

இந்த மொபைலில் 5.5 பெரிய தொடுதிரை full HD 1080p resolutionஉடன் உள்ளது. கமெராவை பொறுத்தவரை பின்பக்கம் 13MP sensor கமெராவும்,முன்பக்கம் 5MP sensor கமெராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, fingerprint scanner, quick music toggle, Yu Wallet மற்றும்Monochrome mode என பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. சில பயனுள்ள ஆப்ஸ்களும் போனில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த மொபைல் போன் சந்தைகளில் உள்ள Xiaomi, LeTV, VIVO மற்றும் Meizu நிறுவன போன்களுக்கு சிறந்த ஒரு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

4000mAh பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ள Yu Yunicorn போனின் விலை ரூ.12.999 ஆகும். ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் இந்த போன், விரைவில் சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply