அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகின்றது சாம்சுங் கலெக்ஸி C5

Loading...

அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகின்றது சாம்சுங் கலெக்ஸி C5அப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த iPhone 6S மற்றும் iPhone 6S Plus என்பன கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

இதனைக் கருத்தில் கொண்டு இக் கைப்பேசிகளின் வடிவமைப்பினை ஒத்த Galaxy C5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசி முதன் முதலாக சீனாவில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

இக் கைப்பேசியில் Snapdragon 617 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட் மூலம் 128GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா மற்றும் 2600 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply