அடர்த்தியான புருவத்தைப் பெற

Loading...

அடர்த்தியான புருவத்தைப் பெறஅழகைப் பட்டியலிடும் போது புருவமும் ஒரு வகையான அழகு தான். அந்த புருவம் கண்களோடு தொடர்புடையது. நிறைய பேர் கண்களில் பேசுவார்கள், அப்போது புருவமும் அதில் பங்கு பெறும். ஒருவரைப் பார்த்தவுடன் கண்கள் மட்டும் கவர்வதில்லை புருவமும் தான்.
அத்தகைய புருவத்தை நாம் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். புருவம் நன்கு வளர நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வளரச் செய்யலாம்.

அடர்த்தியான புருவங்கள் பெற சில வழிகள்:

* தினமும் குளிப்பதற்கு முன் அல்லது உறங்க செல்லும் முன் புருவத்தின் மயிர் காலில் படும்படி விளக்கெண்ணெயைத் தேய்த்து லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
* வெங்காய சாற்றினை தினமும் புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து வந்தால், வெங்காயத்தில் உள்ள சல்பரானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய மயிர்கால்களை வளரச் செய்யும்.
* கற்றாழையின் ஜெல் கூட புருவங்களை அடர்த்தியாக வளர உதவி புரியும். அதற்கு தினமும் புருவங்களுக்கு கற்றாழை ஜெல்லை தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply