அக்கரவடிசல்

Loading...

அக்கரவடிசல்பாசுமதி அரிசி – 1/2 கப்
பாசிபருப்பு – 1/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
பால் – 3 கப்
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
ஒரு சிட்டிகை குங்குமப்பூ
நெய் – 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
முந்திரி – 10
திராட்சை – 15


எப்படி செய்வது?

பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும். ஒரு கிண்ணத்தில் அரிசி, பாசிப் பருப்பு எடுத்து கழுவி 30 நிமிடங்கள் அவற்றை ஊற வைக்கவும். அடி கனமான கடாயில் நெய் விட்டு அரிசி மற்றும் பருப்பு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். பின் பால், தண்ணீர் சேர்த்து அடிக்கடி கிளறவும். அரிசி மற்றும் பருப்பு வெந்த பின் கரண்டியால் அவற்றை மசிக்கவும். மேலும் சிறிது பால் சேர்த்து அதில் சர்க்கரை போட்டு நன்கு கலந்து சமைக்கவும். இறுதியாக ஏலக்காய் பொடி, குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து இறக்கவும். ஒரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை சேர்த்து அரிசியில் ஊற்றவும். அக்கரவடிசல் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply