அகதிகள் போன்று பயங்கரவாதிகளை ஐஎஸ் அனுப்புவதாக குற்றச்சாட்டு | Tamil Serial Today Org

அகதிகள் போன்று பயங்கரவாதிகளை ஐஎஸ் அனுப்புவதாக குற்றச்சாட்டு

அகதிகள் போன்று பயங்கரவாதிகளை ஐஎஸ் அனுப்புவதாக குற்றச்சாட்டு

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அண்மைய தாக்குதல்களை அடுத்து ஜெர்மனியில் பயங்கரவாத எதிர்ப்புக்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் தீவிரவாத குழுக்களுடன் இணைந்து செயற்படும் இரட்டைக்குடியுரிமை பெற்ற ஜெர்மனியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்றும், இது அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதை இலகுவாக்கும் என்றும் ஜெர்மனிய உள்துறை அமைச்சர் தோமஸ் த மைசிரே கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு அகதிகளின் போர்வையில் தமது உறுப்பினர்களை பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுப்புவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

Loading...
Rates : 0
VTST BN