ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை

Loading...

ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறைஃபேஸ்புக் பயனர்கள் இண்டர்நெட் இல்லாமல் தங்களது மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த எளிய வழிமுறை இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்தச் சேவையை வழங்க ஃபோனெட்விஷ் எனும் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து பயனர்களுக்கு இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் சேவையை வழங்கும் பணிகளை ஃபோனெட்விஷ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்த முதலில் உங்களது மொபைலில் இருந்து *325# என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் உங்களது ஃபேஸ்புக் கணக்கின் குறியீடு, ஃபேஸ்புக் யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, மொபைல் திரையில் 10 நாட்களுக்கு ரூ.10 கட்டணம் பிடிக்கப்படும், என உறுதிசெய்யும் தகவல் தெரியும்.
இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக்கை பயன்படுத்த நாள் ஒன்றைக்கு ரூ.1 கட்டணத்தை ஃபோனெட்விஷ் நிறுவனம் வசூலிக்கின்றது. இதனை உறுதி செய்து ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும்.
மொபைலில் டேட்டா பேக் இல்லாத சமயங்களிலும் ஃபேஸ்புக் வசதி இல்லாத பீச்சர் போன் கருவிகளில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply