ஃபுரூட் அண்ட் நட் புலாவ்

Loading...

ஃபுரூட் அண்ட் நட் புலாவ்

தேவையானப் பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்
முந்திரி – 6 (நீளவாக்கில் நறுக்கியது)
பாதாம் – 6 (நீளவாக்கில் நறுக்கியது)
அன்னாசிப்பழம் – ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
ஆப்பிள் – ஒரு துண்டு (விரும்பினால்) (பொடியாக நறுக்கியது)
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3தாளிக்க…

பட்டை – 1
கிராம்பு -1
ஏலக்காய் – 1
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரகம் – 1/4 டீஸ்பூன்செய்முறை:

முதலில், பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து, 1 கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் குக்கரில் வைத்து சாதத்தை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறியதும் நெய்யை ஊற்றி காய வைத்து, அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை உருகி, பொங்கும் சமயத்தில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருஞ்சீரகம் சேர்க்க வேண்டும்.

பின்னர், பச்சை மிளகாய் சேர்த்து, சீவிய முந்திரி, பாதாம் பருப்பு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

அவை வறுபட்டதும் தயார் செய்து வைத்துள்ள சாதம், நறுக்கிய பழங்கள், குங்குமப்பூ, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஃபுரூட் அண்ட் நட் புலாவ் பரிமாறத் தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply