பேஸ்புக்கில் மார்க் ஸுக்கர்பர்க்கை பிளாக் செய்ய முடியுமா

Loading...

பேஸ்புக்கில் மார்க் ஸுக்கர்பர்க்கை பிளாக் செய்ய முடியுமாபேஸ்புக்கில் நம்முடன் நண்பர்களாக இருப்பவர்களை ஒரு சந்தர்ப்பத்தில் பிடிக்காமல் போய்விட்டால் அவர்களை பிளாக் (Block) செய்துவிடுவோம்.

ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கை என்ன முயற்சித்தாலும் ‘பிளாக்’ செய்ய முடியாது. ஏனெனில் மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார்.

தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார்.

பஹாத் என்பவர் நேற்று, பேஸ்புக் நிறுவனர் மார்க்கை பிளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

Loading...
Rates : 0
VTST BN